தர்மபுரி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தர்மபுரி மாவட்டக்குழு கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம்
Published on

தர்மபுரி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தர்மபுரி மாவட்டக்குழு கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆனந்தன், மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டில்லிபாபு, இளம்பரிதி, முத்து, சிசுபாலன், மல்லையன், மாதன், ராமச்சந்திரன், கிரைசாமேரி, அர்ச்சுனன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாணியாறு அணையில் பாசன பகுதிகளில் போதிய தண்ணீர் இன்றி விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வாணியாறு இடதுபுற மற்றும் வலதுபுற கால்வாய்கள் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். பென்னாகரம், ஒகேனக்கல் ஆகிய பகுதிகளில் வனவிலங்குகளால் பயிர்சேதம் மற்றும் உயிர்சேதம் ஏற்படுவதை தடுக்க வேண்டும். வனவிலங்குகளால் சேதப்படுத்தப்படும் பயிர்களுக்கு உரிய நிவாரண உதவியை வழங்க வேண்டும் என்பவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com