

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழக அரசின் நீர்வளத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து, புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு சுழற்சி முறையில் நான்கு நனைப்பிற்கும், ஒவ்வொரு நனைப்பும் முதல் மண்டலத்திற்கு ஐந்து நாட்களுக்கும், இரண்டாம் மண்டலத்திற்கு ஐந்து நாட்களுக்கும் ஆக 10 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் விட்டும் 5 நாட்கள் நிறுத்தியும் மொத்தம் 55 நாட்களுக்கு 6.2.2026 முதல் 1.4.2026 வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும். மீதமுள்ள நீரினை பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு திறந்து விடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.