பண்டிகை நாட்களுக்கான டயட் டிப்ஸ்

உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு செல்வதற்கு முன்பு, குறைந்த அளவு உணவு சாப்பிட்டு விட்டு செல்லுங்கள். காய்கறி சாலட், ஆரோக்கியமான சிற்றுண்டி போன்றவற்றை சாப்பிடும்போது வயிறு சற்றே நிறைந்து இருக்கும். இதனால் விருந்தில் இருக்கும் தின்பண்டங்கள் உங்கள் ஆர்வத்தைத் தூண்டாமல் தடுக்க முடியும்.
பண்டிகை நாட்களுக்கான டயட் டிப்ஸ்
Published on

மது கலாசாரத்தில், பண்டிகைகளும் விசேஷங்களும் அதிகமாக நடக்கும். அனைத்து பண்டிகைகளும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அதிகரிக்கக்கூடியவை. அதேசமயம் பண்டிகைக்கு தயாரிக்கும் பலகாரங்கள், உடல் எடையை அதிகரிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

பண்டிகை நாட்களில் ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றி, உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கு சில குறிப்புகள்:

பண்டிகைக்கால பரபரப்பில் பலரும் காலை உணவை தவிர்த்து விடுவார்கள். அதனால் மதியம் உணவு சாப்பிடும் அளவு அதிகரிக்கும். இடையில் நொறுக்குத்தீனிகள் சாப்பிடும் எண்ணம் உண்டாகும். அதன் காரணமாக பண்டிகை பலகாரங்களை கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடுவீர்கள்.

பண்டிகை நாட்களில் உடல் எடையைக் குறைப்பது சாத்தியம் இல்லாதது. உறவினர்களும், நண்பர்களும் இனிப்புகளை வழங்கும்போது உங்களால் சாப்பிடாமல் இருக்க முடியாது. எனவே உடல் எடையைக் குறைக்கும் எண்ணத்தைத் தவிர்த்து, தற்போது இருக்கும் எடையை அதிகரிக்காமல் பராமரிப்பதற்கான வழிகளைக் கடைப் பிடியுங்கள்.

பண்டிகை நாட்களிலும் உடற்பயிற்சியை தவிர்க்காதீர்கள். மிதமான உடற்பயிற்சிகள், உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதோடு மன நிறைவையும் உண்டாக்கும்.

உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு செல்வதற்கு முன்பு, குறைந்த அளவு உணவு சாப்பிட்டு விட்டு செல்லுங்கள். காய்கறி சாலட், ஆரோக்கியமான சிற்றுண்டி போன்றவற்றை சாப்பிடும்போது வயிறு சற்றே நிறைந்து இருக்கும். இதனால் விருந்தில் இருக்கும் தின்பண்டங்கள் உங்கள் ஆர்வத்தைத் தூண்டாமல் தடுக்க முடியும்.

குளிர்பானங்கள் குடிப்பதில் சற்றே கவனமாக இருங்கள். அதிகப்படியான சர்க்கரை உங்கள் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும்.

மதிய உணவில் அதிக கொழுப்பு உள்ள பொருட்களையும், இனிப்புகளையும் சாப்பிட்டீர்கள் என்றால், மற்ற நேரங்களில் எளிய உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள். ஒரு நாளுக்கு கூடுதலாக 500 கலோரிகள் எடுத்துக்கொண்டால், அது உங்கள் உடல் எடையில் விரைவாக எதிர்மறை மாற்றத்தை உண்டாக்கும்.

பண்டிகை நாட்களாகவே இருந்தாலும், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றுங்கள். எண்ணெய், கொழுப்பு நிறைந்த, மசாலா சேர்த்த உணவுகளை தவிர்த்து விடுவதே நல்லது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com