குளம், வாய்க்கால் தூர்வாரும் பணி

மணவெளி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தினை சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்.
குளம், வாய்க்கால் தூர்வாரும் பணி
Published on

அரியாங்குப்பம்

மணவெளி தொகுதிக்கு உட்பட்ட நல்லவாடு, ஆண்டியார்பாளையம், தவளக்குப்பம், டி.என்.பாளையம் ஆகிய 4 பஞ்சாயத்துகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சத்து 21 ஆயிரம் செலவில் குளம், வாய்க்கால் தூர்வாரும் பணி நடக்கிறது. இந்த பணிகளை சபாநாயகர் செல்வம் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், பா.ஜ.க. மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் ரமேஷ், தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com