தளவாய்புரம் பள்ளிக்கூடத்தில் இடிந்து விழும் நிலையில் சத்துணவுக்கூடம்

தளவாய்புரம் பள்ளிக் கூடத்தில் சத்துணவுக்கூடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
தளவாய்புரம் பள்ளிக்கூடத்தில் இடிந்து விழும் நிலையில் சத்துணவுக்கூடம்
Published on

தளவாய்புரம்,

தளவாய்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அண்ணா கலையரங்கம் அருகே இருக்கிறது. இந்த பள்ளியில் சுமார் 200 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சத்துணவுக்கூடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் மாணவ-மாணவிகளுக்கு சத்துணவு செய்ய அருகில் உள்ள கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது.அந்த கட்டிடத்தில் தான் சத்துணவுக்கூடம் தற்போது செயல்பட்டு வருகிறது. ஆனால் பழைய சத்துணவுக் கூடம் இன்னும் அப்படியே அபாய நிலையில் உள்ளது. இங்கு பலத்த மழை அல்லது காற்று அடித்தால் இந்த கட்டிடம் இடிந்து விழும் நிலை உள்ளது.

வேண்டுகோள்

இந்த கட்டிடம் அருகே பள்ளி மாணவ- மாணவிகள் சிலர் விளையாடி வருகின்றனர். எனவே மாவட்ட கல்வி அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு விரைவில் தளவாய்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள பழைய சத்துணவு கூடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com