இயக்குனர் ராஜேஷின் அடுத்த படைப்பு தொடங்கியது

தமிழ் சினிமாவில் காமெடி படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்த இயக்குனர் ராஜேஷ் இவரின் அடுத்த படைப்பை தொடங்கி இருக்கிறார்.
இயக்குனர் ராஜேஷின் அடுத்த படைப்பு தொடங்கியது
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ராஜேஷ் 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'கடவுள் இருக்கான் குமாரு', மிஸ்டர் லோக்கல் போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். இவர் அடுத்ததாக ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இவர் தற்போது சாந்தனு மற்றும் முகென் ராவ் நடிக்கும் இணைய தொடரை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹன்சிகா மோத்வானி, ஜனனி ஐயர், சக்தி பஞ்சு சுப்பு, லக்கி நாராயணன், அபிஷேக் உள்ளிட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் பணிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

இவர் கடைசியாக நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமாரை வைத்து வணக்கம் டா மாப்ள என்ற படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com