படப்பிடிப்பில் மும்முரம் காட்டும் இயக்குனர் ஷங்கர்

இயக்குனர் ஷங்கர் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பில் மும்முரம் காட்டும் இயக்குனர் ஷங்கர்
Published on

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான 'ஜரகண்டி' பாடல் தீபாவளியன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாடல் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பாடல் வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று வருவதாகவும் இங்கு ராம் சரண் மற்றும் எஸ்.ஜே. சூர்யா காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com