800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

செஞ்சி அருகே 800 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
Published on

செஞ்சி,

செஞ்சி அருகே போத்துவாய் மலைப்பகுதியில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் இன்ஸ்பெக்டர் தங்ககுருநாதன் நல்லாண்பிள்ளை பெற்றாள் சப்-இன்ஸ்பெக்டர்கள் கவுரிசங்கர், விசுவநாதன் தனிப்பிரிவு பாரதி உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் 800 லிட்டர் சாராய ஊறல் பதப்படுத்தி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை கீழே கொட்டி அழித்தனர். இது குறித்து நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com