அடிதடி தகராறில் 3 பேர் காயம்

சிங்கம்புணரி அருகே அடிதடி தகராறில் 3 பேர் காயம் அடைந்தனர்.
அடிதடி தகராறில் 3 பேர் காயம்
Published on

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 42). இவருக்கு சொந்தமான ஆடு சின்னச்சாமி மகன் கனகு என்பவரின் தோட்டத்தில் மேய்ந்தது. இதனால் ராஜாவுக்கும், கனகுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று ராஜா, அவருடைய மனைவி போதும் பொண்ணு, ராஜாவின் மகள் சுதா ஆகியோரை கனகு குடும்பத்தினர் தாக்கினர்.

இதில் அவர்கள் 3 பேரும் காயம் அடைந்தனர். இவர்கள் சிங்கம்புணரி வட்டார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து ராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில் கனகு, சேதுபதி, செல்வி, சரண் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com