பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு

பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தடைபட்டது.
பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு
Published on

பெரியபாளையம்,

தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெங்கல் கிராமத்தில் உள்ள 2 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வேலை செய்யவில்லை. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அந்த எந்திரங்களை சரி செய்த பின்னர் ஒரு வாக்குச்சாவடியில் மணி நேரம் தாமதமாகவும், ஒரு வாக்குச்சாவடியில் ஒரு மணி நேரம் தாமதமாகவும் வாக்குப்பதிவு தொடங்கியது.

திருவள்ளூரை அடுத்த சேலை கிராமம் மற்றும் ஒண்டிகுப்பம் கிராமங்களில் வாக்குப்பதிவின் போது வாக்குப்பதிவு எந்திரங்கள் திடீரென பழுதடைந்தது. இதன் காரணமாக மணி நேரம் கால தாமதமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

பூண்டி

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்டது பேரிட்டிவாக்கம் ஊராட்சி. இங்குள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் கும்மிடிப்பூண்டி தொகுதிக்கான தேர்தல் நடைபெற்றது.

நேற்று காலை 9 மணியளவில் வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் 1 மணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com