நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பேற்பு
நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பேற்பு
Published on

நாமக்கல்:

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்களை பேல், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த கலந்தாய்வில் மாநிலம் முழுவதும் இருந்து 110 மாவட்ட கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டு, முன்னுரிமை அடிப்படையில் இடங்களை தேர்வு செய்து இடமாறுதல் பெற்றனர்.

நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்த பாலசுப்பிரமணியம், சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு இடமாறுதல் பெற்றார். அவருக்கு பதிலாக பெருந்துறை மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்த ராமன் நியமிக்கப்பட்டார். இவர் நேற்று நாமக்கல் வந்து பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com