தி.மு.க. அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு: கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தி.மு.க. அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவையொட்டி கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தி.மு.க. அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு: கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
Published on

ஓசூர்:

தி.மு.க. அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து ஓசூரில் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதையொட்டி ஓசூர் பஸ் நிலையத்தில் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா பயணிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர்கள் ஆர்.ரவி, காந்திமதி கண்ணன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சென்னீரப்பா, யசஸ்வினி மோகன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஜெய்ஆனந்த், மற்றும் மஞ்சுநாத், சுனந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com