சிகிச்சைக்கு வந்த பெண்ணை கற்பழித்த டாக்டர் கைது

சிகிச்சைக்கு வந்த பெண்ணை கற்பழித்ததாக டாக்டர் கைது செய்யப்பட்டார்.
சிகிச்சைக்கு வந்த பெண்ணை கற்பழித்த டாக்டர் கைது
Published on

புனே,

சிகிச்சைக்கு வந்த பெண்ணை கற்பழித்ததாக டாக்டர் கைது செய்யப்பட்டார்.

சிகிச்சைக்கு சென்ற பெண்

புனே மாவட்டம் அம்பேகாவ் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் அமித் ஆனந்த்ராவ் (வயது29). இவர் கட்ரஜ்-மங்தேவாடி பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு பெண் ஒருவர் டாக்டரின் கிளினிக்கிற்கு சிகிச்சைக்காக வந்தார்.

அப்போது டாக்டர் பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கி கொண்டார். அதன்பிறகு அவர் பெண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுக்க தொடங்கினார். இதனால் அந்த பெண், டாக்டரை கண்டித்தார். இதைதொடர்ந்து அவர் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார்.

கற்பழிப்பு

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒருநாள் அந்த பெண் சிகிச்சைக்காக டாக்டரின் கிளினிக்கிற்கு சென்றார். அப்போது அவர் ஊசி போட வேண்டும் என கூறி பெண்ணை ஆடைகளை கழற்ற வைத்து கற்பழித்தார். அதன்பிறகு அவர் தொடர்ந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த பெண் சம்பவம் குறித்து பாரதி வித்யாபீத் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிகிச்சைக்கு வந்த பெண்ணை கற்பழித்த டாக்டரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com