சிறப்பு விருந்தினரை வரவேற்க மாணவர்களை நிறுத்த வேண்டாம்

அரசு விழாக்களில் சிறப்பு விருந்தினரை வரவேற்க மாணவர்களை நிறுத்த வேண்டாம் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
சிறப்பு விருந்தினரை வரவேற்க மாணவர்களை நிறுத்த வேண்டாம்
Published on

புதுச்சேரி

அரசு விழாக்களில் சிறப்பு விருந்தினரை வரவேற்க மாணவர்களை நிறுத்த வேண்டாம் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

மாணவர்கள் மயக்கம்

புதுச்சேரி காமராஜர் மணி மண்டபத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. விழாவில் விருந்தினரை வரவேற்க நின்று கொண்டு இருந்த மாணவர்களின் சிலர் மயக்கம் அடைந்தனர்.

இது தொடர்பாக புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி, கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்ற மாணவர் தின விழா தொடங்குவது சற்று காலதாமதம் ஆனதால், வரவேற்பு அளிப்பதற்காக நிறுத்தப்பட்ட மாணவர்களில் சிலர் மயங்கி விழுந்து விட்டதாக செய்திகள் வந்ததை அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

நிகழ்ச்சி தொடங்க காலதாமதம் ஆனதற்கு சில நடைமுறை சிக்கல்களே காரணம். இனிமேல் இத்தகைய அரசு விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகளில் இது போன்ற அசவுகரியங்கள் நிகழாமல் இருக்க மாணவர்களை வெயிலில் நிறுத்தி சிறப்பு விருந்தினருக்கு வரவேற்பு அளிக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். மேலும், நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்களை ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றால் மட்டும் போதுமானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com