வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கிய கணவர் கைது

வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கிய கணவர் கைது
Published on

கரூர்,

கரூர் அருகே உள்ள செல்லாண்டி பாளையத்தை சேர்ந்தவர் கவுசல்யா (வயது 26). இவருடைய கணவர் மனோஜ் (27). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கவுசல்யாவின் கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் குறித்து கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கவுசல்யா கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரூபி வழக்குப்பதிவு செய்து மனோஜை கைது செய்தார். மேலும், அவருடைய தாய் அரசம்மாள் (45), தந்தை ராமராஜ் (50) மற்றும் உறவினர் ராசம்மாள் (50) ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com