பெண்ணிடம் வரதட்சணை கொடுமை

புதுவை காமராஜர் நகரில் பெண்ணிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் மற்றும் மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணிடம் வரதட்சணை கொடுமை
Published on

புதுச்சேரி

புதுவை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது முஸ்தபா. இவருக்கும் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ரபியத்துல் யசாரியா (வயது 31) என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்தநிலையில் ரபியத்துல் யசாரியாவை, முகமது முஸ்தபா, அவரது தாயார் மும்தாஜ் பீவி ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக தெரிகிறது. இது குறித்து புதுவை மகளிர் போலீஸ் நிலையத்தில் ரபியத்துல் யசாரியா அளித்த புகாரின்பேரில் போலீசார் கணவர், மாமியார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com