காஞ்சீபுரம் அருகே அதிக அளவில் மது குடித்தவர் சாவு

காஞ்சீபுரம் அருகே அதிக அளவில் மது குடித்தவர் பரிதாபமாக இறந்தார்.
காஞ்சீபுரம் அருகே அதிக அளவில் மது குடித்தவர் சாவு
Published on

மது குடித்தார்

காஞ்சீபுரத்தை அடுத்த கொட்டவாக்கம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் விஜி (வயது 25), இவர் அதே பகுதிகளில் உள்ள வீட்டுக்கே சென்று முடி திருத்தும் தொழில் செய்து வந்தார்.

விஜிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. குடிபழக்கம் உடைய விஜி நேற்று கொட்டவாக்கம் ரோட்டு தெருவில் அளவுக்கு அதிகமாக மது குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

சாவு

விஜியை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com