

நல்லம்பள்ளி:
ஐதராபாத்தில் இருந்து இரும்பு பைப் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் வழியாக சேலத்திற்கு வந்தது. லாரியை மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த குரோமிகோ (வயது 37) என்பவர் ஓட்டி வந்தார், அவருடன் மாற்று டிரைவர்களாக புஷ்பராஜ் (35), சூசைராஜ் (37) ஆகியோர் உடனிருந்தனர். தொப்பூர் கணவாய் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுபாட்டை இழந்த லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் டிரைவர்கள் குரோமிகோ உள்ளிட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த குரோமிகோ நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.