ஓசூர் அருகே வாகனம் மோதி தனியார் நிறுவன டிரைவர் சாவு

ஓசூர் அருகே வாகனம் மோதி தனியார் நிறுவன டிரைவர் இறந்தார்.
ஓசூர் அருகே வாகனம் மோதி தனியார் நிறுவன டிரைவர் சாவு
Published on

ஓசூர்:

மத்திய பிரதேச மாநிலம், மால்வா மாவட்டம், அர்ஜுன் நகரை சேர்ந்தவர் ராஜேஷ்லம் (வயது 32). இவர், ஓசூர் அருகே குமுதேப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் ஓசூரில், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, காந்திநகர் பெட்ரோல் பங்க் அருகில் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் ராஜேஷ்லம் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com