ஏரியில் மூழ்கி டிராக்டர் டிரைவர் சாவு

ஏரியில் மூழ்கி டிராக்டர் டிரைவர் உயிரிழந்தா.
ஏரியில் மூழ்கி டிராக்டர் டிரைவர் சாவு
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள தென்னமாதேவி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் திருமால் (வயது 58), டிராக்டர் டிரைவர். இவர் நேற்று காலை அதே கிராமத்தில் உள்ள ஏரிக்கரை தரைப்பாலத்தின் ஓரமாக அமர்ந்திருந்தார். அப்போது, பாலத்தில் இருந்து அவர் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருமாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com