ஈஸ்வரன்

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் "ஈஸ்வரன்" படத்தின் முன்னோட்டம்.
ஈஸ்வரன்
Published on

சிம்புவின் 46-வது படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கி உள்ளார். இந்த படத்துக்காக சிம்பு தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து நடித்திருக்கிறார். கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆகஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக ஈஸ்வரன் உருவாகி உள்ளது.

இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். அந்தோனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com