தினமும் முந்திரி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

முந்திரியில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. இதில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஈ, வைட்டமின் பி6, போலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் அதிகமாக உள்ளன. முந்திரியில் இருக்கும் ‘ஒலிக் அமிலம்’ இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
தினமும் முந்திரி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?
Published on

லகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையாக உடல் பருமன் உருவெடுத்து வருகிறது. உணவுமுறை மாற்றம், ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பது, துரித உணவுகள், தூக்கமின்மை, ஹார்மோன் சமநிலையில் மாற்றம் என இதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. இருந்தாலும், நாம் பின்பற்றக்கூடிய உணவுமுறை இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதற்கேற்ப உடலுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்கும் உணவுகள், உடல் எடையை அதிகரிக்கும் உணவுகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பலரும் விரும்பி சாப்பிடும் முந்திரி, உடல் எடையை அதிகரிக்குமா என்பது பற்றிய தகவல்கள் இதோ…

முந்திரியில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. இதில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஈ, வைட்டமின் பி6, போலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் அதிகமாக உள்ளன. முந்திரியில் இருக்கும் 'ஒலிக் அமிலம்' இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

வறுக்காமல், பொரிக்காமல், தினமும் ஒரு கைப்பிடி அளவு முந்திரி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். முந்திரியில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கும். உடலில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைத்து எடையைக் குறைக்க உதவும். உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள், காலை உணவாக ஒரு கைப்பிடி அளவு முந்திரி சாப்பிட்டால் எடைக்குறைப்பு முயற்சி எளிதில் கைகூடும் என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஒரு நாளுக்கு சராசரியாக 20 முதல் 30 முந்திரிகள் வரை சாப்பிடலாம். இந்த அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் தலைவலி, வயிற்று உப்புசம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com