ரெயில்வேயில் 1,265 காலிப்பணியிடங்கள்; விண்ணப்பங்கள் வரவேற்பு

ஏதேனும் ஒரு துறையில், பட்டம் பெற்றவர்கள், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ரெயில்வேயில் 1,265 காலிப்பணியிடங்கள்; விண்ணப்பங்கள் வரவேற்பு
Published on: 

ரெயில்வேயில், நாடு முழுதும், 1,265 நிலைய அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரெயில்வே நிர்வாகம், தொழில்நுட்பப் பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில், காலியாக உள்ள பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன.

பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

அந்த வகையில், நாடு முழுதும், 1,265 'ஸ்டேஷன் மாஸ்டர்' பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு துறையில், பட்டம் பெற்றவர்கள், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்.ஆர்.பி., எனப்படும் ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் வாயிலாக, மொத்தம் 1,265 பணி இடங்கள் நிரப்பபட உள்ளன.

சென்னையில் 119 பணியிடங்கள்

இதில் அதிகபட்சமாக, மும்பை 177 இடங்கள்; ஜம்மு, ஸ்ரீநகர் - 122; சென்னை 119 இடங்கள் இடம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பப்பதிவு நேற்று முன்தினம் 'ஆன்லைன்' முன்தினம் தொடங்கியுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள், நவம்பர் 25- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு ரெயில்வே இணையதங்களை பார்வையிடலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com