1,910 காலிப்பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அடுத்த அறிவிப்பு

இந்த காலிப்பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
1,910 காலிப்பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அடுத்த அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழக போக்குவரத்து துறை மற்றும் மின்சார வாரியம் உள்பட அரசு பொதுத்துறை மற்றும் அரசு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்

பணியிடங்கள்: ஜூனியர் டெக்னிக்கல் அஸ்சிஸ்டன்ட், ஹாஸ்டல் சூப்பிரண்ட், சர்வேயர், ஜூனியர் டிரெய்னிங் ஆபிசர், ஜூனியர் டிரேட்ஸ்மேன் (தமிழக அரசு போகுவரத்து கழகம்), வெல்டர், பிட்டர், டீசல் மெக்கானிக், டெக்னிக்கல் அஸிசிஸ்டண்ட் (மின் துறை) என 58 வகையான காலிப்பணியிடங்களில் 1,910 இடங்கள் நிரப்பபடுகின்றன.

கல்வி தகுதி : ஐடிஐ மற்றம் டிப்ளமா, டிகிரி

வயது வரம்பு : 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்,

விண்ணப்பிக்க கடைசி நாள் : 12-07-2025

தேர்வு நடைபெறும் நாள் : கணினி வழி தேர்வுகள் ஆகஸ்ட் 31 , செப்டம்பர் 7 மற்றும் செப்டம்பர் 11 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும்.

கூடுதல் விவரங்களை தேர்வாணையத்தின் இணைய தளத்தில் ( www.tnpsc.gov.in ) அறிந்து கொள்ளலாம்.

அரசுத் துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து காலிப்பணியிடங்கள் அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்வுக்கு முன்பாக காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com