ரெயில்வேயில் 3,548 காலிப்பணியிடங்கள்... பட்டதாரிகள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ரெயில்வேயில் 3,548 காலிப்பணியிடங்கள்... பட்டதாரிகள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!
Published on: 

சென்னை,

ரெயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) சார்பில் 2026-ம் ஆண்டுக்கான என்.டி.பி.சி. (Graduate Level) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மொத்தம் 3,548 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

என்னென்ன பணியிடங்கள்?

கூட்ஸ் ரெயில் மேலாளர் (Goods Train Manager), தலைமை வணிகம் மற்றும் டிக்கெட் மேற்பார்வையாளர் (Chief Commercial-cum-Ticket Supervisor), இளநிலை கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சர் (Junior Account Assistant-cum-Typist), மூத்த எழுத்தர் மற்றும் தட்டச்சர் (Senior Clerk-cum-Typist) உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள

கல்வித்தகுதி

ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். புதிய பட்டதாரிகளும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கடைசி நாள்

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (நவம்பர் 8) கடைசி நாளாகும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://tamilanguide.in/rrb-ntpc-recruitment-2026/ என்ற இணையதள இணைப்பு மூலம் விண்ணப்பிக்கலாம்.

X