தொழில்முனைவோருக்கான 5 நாள் லேப்டாப் ஹார்ட்வேர் மற்றும் சிப்-லெவல் பயிற்சி..!

இப்பயிற்சியின் கூடுதல் விவரங்களைப் பெறவும் மற்றும் முன்பதிவு செய்திடவும் www.editn.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளவும்.
தொழில்முனைவோருக்கான 5 நாள் லேப்டாப் ஹார்ட்வேர் மற்றும் சிப்-லெவல் பயிற்சி..!
லேப்டாப் ஹார்ட்வேர் மற்றும் சிப்-லெவல் பயிற்சி
Published on: 

சென்னை,

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தமிழ்நாடு ஐந்து நாள் "லேப்டாப் ஹார்ட்வேர் மற்றும் சிப்-லெவல் பயிற்சி"இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

5 நாள் பயிற்சி

தமிழ் நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தொழில் முனைவோருக்கான ஐந்து நாள் "லேப்டாப் ஹார்ட்வேர் மற்றும் சிப்-லெவல் பயிற்சி" வரும் 12.10.2026 முதல் 16.10.2026 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

பயிற்சி பாடத்திட்டம்

லேப்டாப் ஹார்ட்வேர் மற்றும் சிப்-லெவல் பயிற்சி - நாள் 1

லேப்டாப் பற்றிய அறிமுகம்

லேப்டாப் பிரித்தல் மற்றும் மீண்டும் பொருத்துதல்

அடாப்டர் (Adaptor) பரிசோதனை

RAM மற்றும் ROM வகைகள் மற்றும் அவற்றின் விளக்கம்

CPU சாக்கெட்டுகள் மற்றும் அவற்றின் வகைகள்

மதர்போர்டு வகைகள் மற்றும் சிப் செட்கள் & ஆர்க்கிடெக்சர்

ஹார்ட்வேர் பழுதுகளை கண்டறிதல் மற்றும் சரிசெய்தல்

அனைத்துப் பிழைக் குறியீடுகள் (Error Codes) மற்றும் சரிசெய்தல் வழிமுறைகள்

இயங்குதளம் (OS) நிறுவல் மற்றும் டிரைவர் நிறுவல் பயிற்சி

லேப்டாப் ஹார்ட்வேர் மற்றும் சிப்-லெவல் பயிற்சி - நாள் 2

சிப்-லெவல் சேவைகள் - சுருக்கமான அறிமுகம்

SMT கூறுகள் மற்றும் மேம்பட்ட சிப்-லெவல் கூறுகள் பற்றிய விளக்கம் மற்றும் பழுதுகளை கண்டறிதல்

ரெசிஸ்டர், கேபாசிட்டர், இன்டக்டர், டையோடு, NPN & PNP டிரான்சிஸ்டர்கள், UJT, FET மற்றும் MOSFET-அமைப்பு, செயல்பாடு மற்றும் செய்முறை பயிற்சி

மேற்கண்ட கூறுகளை அகற்றுதல் மற்றும் மீண்டும் பொருத்துதல் மாணவர்களின் தனிப்பட்ட செய்முறைப் பயிற்சி

மல்டிமீட்டர் மூலம் கூறுகளின் பழுதுகளை கண்டறிதல் மாணவர்களின் தனிப்பட்ட செயல்திறன் மதிப்பீடு

லேப்டாப் ஹார்ட்வேர் மற்றும் சிப்-லெவல் பயிற்சி - நாள் 3

மின்னழுத்தம் (Voltage), மின்னோட்டம் (Current), ஆம்பியர் (Amps) மற்றும் வாட்ஸ் (Watts) பற்றிய விளக்கம்

NPN & PNP MOSFET, UJT, FET செயல்பாடு மற்றும் N-Channel, P-Channel MOSFET பற்றிய விளக்கம் மற்றும் பழுது கண்டறிதல்

லேப்டாப்பில் பயன்படுத்தப்படும் மின்னழுத்தங்கள்: USB, CPU Fan, Power IC, HDD, DVD, BIOS IC, CMOS Battery, Keyboard, Power Switch, Wi-Fi, Processor, RAM, Speaker, Chipset, LED Light, Touchpad, Camera மற்றும் Wi-Fi Switch

லேப்டாப் ஹார்ட்வேர் மற்றும் சிப்-லெவல் பயிற்சி - நாள் 4

மதர்போர்டில் மின்னழுத்தங்களை கண்டறியும் முறை - Schematic Tracing Schematic Diagram மூலம் மதர்போர்டை ஆய்வு செய்யும் முறை செயலிழந்த (Dead) லேப்டாப்புகளில் பழுது கண்டறியும் நுட்பங்கள்

லேப்டாப் ஹார்ட்வேர் மற்றும் சிப்-லெவல் பயிற்சி - நாள் 5

சிக்னல் டிரேசிங் & பயாஸ் ப்ரோக்ராமிங், சார்ஜிங் பிரிவு (Charging Section) ஆய்வு, ஸ்டாண்ட்பை பவர் பிரிவு (Standby Power Section) ஆய்வு SUS CLK, RTC RESET, INTRUDER, INTUREN, AC OK, S5 ENABLE, PGOOD, RSM ST, PWRBTOUT, SLP S4, SLP S3 போன்ற சிக்னல்களை ஆய்வு செய்தல்,BIOS Flashing பயிற்சி.

பயிற்சியில் சேர தகுதியானவர்கள்

மத்திய /மாநில அரசுகள் வழங்கும் நிதியுதவி திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த விவரங்களும் பயிற்சியின் ஒரு பகுதியாக விளக்கப்படும். இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் (ஆண்/பெண் /திருநங்கைகள் திருநம்பிகள்) 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். குறைந்தபட்ச கணினி அறிவு வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்கு பெறும் பயனாளிக்கென குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்துப் பெற்று கொள்ளலாம்.

முன்பதிவு

மேலும், இப்பயிற்சியின் கூடுதல் விவரங்களைப் பெறவும் மற்றும் முன்பதிவு செய்திடவும் www.editn.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளவும். கைபேசி 8668100181/9360221280 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இ-டிஐ.ஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டை ஈக்காட்டுத்தாங்கல், , - 600 032. பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com