தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கை விண்ணப்பம் இன்று தொடக்கம்

மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று பிற்பகல் 12 மணி முதல் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கை விண்ணப்பம் இன்று தொடக்கம்
Published on

தமிழ்நாட்டில் 2026-27 கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று தொடங்குகிறது. மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று பிற்பகல் 12 மணி முதல் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் www.tnmedicalselection.org என்ற இணையதளம் மூலம் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

நீட் முடிவுக்கு முன்பே விண்ணப்பப் பதிவு

இந்த ஆண்டு, நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் முன்கூட்டியே தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சான்றிதழ்களை பதிவேற்ற அறிவுறுத்தல்

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தை இணையவழியில் செலுத்திய பிறகு, தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை முறையாக பதிவேற்றம் செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com