27 கோவில்களில் அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம் -அறநிலையத்துறை அறிவிப்பு

05.08.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

27 கோவில்களில் அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம் -அறநிலையத்துறை அறிவிப்பு
Published on

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 27 திருக்கோவில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கான தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் சீர்மிகு நல்லாட்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் வழிக்காட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சட்டப்பிரிவு 46(3) ல் நிர்வாகத் திட்டம் உள்ள 27 திருக்கோவில்களுக்கு பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

அறங்காவலர் நியமன அறிவிப்பு, அறங்காவலர் நியமனம் செய்யப்படவுள்ள திருக்கோவில்கள் விவரம், நிர்வாகத்திட்ட விவரம். தகுதிகள், விண்ணப்ப படிவம் ஆகியவை (www.hrce.tn.gov.in) இத்துறையின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திருக்கோயிலுக்கு அறங்காவலராக விண்ணப்பிப்பவர்கள் திருக்கோயிலுக்கென ஏற்படுத்தப்பட்ட நிர்வாகத்திட்ட சரத்துக்களை www.hrce.tn.gov.in இத்துறை வலைதளத்தில் பார்வையிட்டு படித்து அதன் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை இணைய வழியில் (online) பூர்த்தி செய்தோ அல்லது பதிவிறக்கம் செய்தோ உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ, விரைவஞ்சல் (Speed Post) மூலமாகவோ சம்பந்தப்பட்ட இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பலாம். 05.08.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அறங்காவலர்கள் நியமிக்கப்படவுள்ள 27 திருக்கோவில்களின் விவரம்:-

1. சென்னை, திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோவில்,

2. மயிலாப்பூர் அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோவில்,

3. திருவல்லிக்கேணி, அருள்மிகு திருவேட்டீஸ்வரர் திருக்கோவில்,

4. பெரியமேடு, அருள்மிகு எல்லம்மன் திருக்கோவில்,

5. சூளை, அருள்மிகு அங்காளபரமேஸ்வரி மற்றும் காசிவிசுவநாத சுவாமி திருக்கோவில்,

6. ஓட்டேரி அருள்மிகு செல்லபிள்ளைராயர் திருக்கோவில்,

7. தங்கசாலை தெரு. அருள்மிகு செங்ழுநீர் பிள்ளையார் மற்றும் கோலூரம்மன் திருக்கோவில்,

8. வில்லிவாக்கம், அருள்மிகு சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோவில்,

9. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், அனுமந்தராய சுவாமி திருக்கோவில், இடுகம்பாளையம், அருள்மிகு

10. கோவை மாவட்டம். ரங்கவுடர்வீதி, சௌடேஸ்வரியம்மன் திருக்கோவில், அருள்மிகு புதுராமலிங்க

11. கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருள்மிகு புத்துமாரியம்மன் திருக்கோவில்,

12. திண்டுக்கல் மாவட்டம், அருள்மிகு செங்குந்தர் காளியம்மன் திருக்கோவில்,

13. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோவில்,

14. ஈரோடு மாவட்டம், சூரம்பட்டிவலசு அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்,

15. நாமக்கல் மாவட்டம், கோரக்குட்டை இறையமங்கலம், அருள்மிகு இளைய பெருமாள் (எ) வெங்கட்ரமணசுவாமி திருக்கோவில்,

16. காஞ்சிபுரம் மாவட்டம், குமரக்கோட்டம். அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

17. காஞ்சிபுரம் மாவட்டம் இளையனார்வேலூர், அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்,

18. செங்கல்பட்டு, அருள்மிகு கோதண்டராமர் திருக்கோவில்,

19. மதுரை மாவட்டம், புட்டுத்தோப்பு. அருள்மிகு புட்டுஉற்சவ வகையறா திருக்கோவில்,

20. மயிலாடுதுறை திருக்கோவில், மாவட்டம், கும்பகோணம், அருள்மிகு சாரங்கபாணி

இராமநாதசுவாமி 21. இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம், அருள்மிகு திருக்கோவில்,

22. சிவகங்கை மாவட்டம், அரியாக்குறிச்சி. அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில்,

23. சிவகங்கை மாவட்டம், மடப்புரம், அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்ன் திருக்கோவில்,

24. தஞ்சாவூர் மாவட்டம், பூக்காரத் தெரு. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்,

25. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி. அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில்,

26. திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தமல்லி, அருள்மிகு திருகச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் திருக்கோவில்,

27. திருவள்ளூர், அருள்மிகு ஜெகன்னாதப் பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார் திருக்கோவில்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com