214 கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்: விண்ணப்பிக்கும் வழிமுறைகள் என்ன?

22.07.2026 அன்று மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்து சமய அறநிலையத் துறை
Published on

சென்னை,

இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

முதலமைச்சர் விஜய் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 274 கோயில்களுக்கு பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறங்காவலர் நியமன அறிவிப்பு

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சட்டப்பிரிவு 46(III)ன் கீழ் பிரசுரிக்கப்பட்ட 214 திருக்கோவில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து 22.07.2026 அன்று மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இணையதளம்

அறங்காவலர் நியமன அறிவிப்பு, அறங்காவலர் நியமனம் செய்யப்படவுள்ள திருக்கோவில்கள் விவரம், தகுதிகள், விண்ணப்ப படிவம் ஆகியவை இத்துறையின் இணையதளத்தில் (www.hrce.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

1. விண்ணப்பங்களை இணையவழியில் (Online) பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.

2 விண்ணப்ப படிவங்களை மேற்கண்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.

3.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் நேரிலோ அல்லது விரைவஞ்சல் (Speed Post) மூலமாகவோ நியமன அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com