11-ம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு முடிவுகள் - இன்று வெளியீடு

11-ம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது.
11-ம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு முடிவுகள் - இன்று வெளியீடு
Published on

சென்னை,

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர்களின் திறனை ஊக்குவிக்க, அரசு தேர்வுகள் இயக்ககத்தின் சார்பில் முதல்-அமைச்சர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டது. சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர்.

இந்நிலையில், இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இதில் ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை ஒரு கல்வியாண்டிற்கு மாதம் ரூ.1,000 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com