

தேர்வு நடத்தும் நிறுவனம்: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்)
காலி பணி இடங்கள்: 11,403
பதவி: கஸ்டமர் சர்வீஸ் அசோசியேட்ஸ் (கிளார்க்)
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு
வயது: 21-8-2026 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது: 20, அதிகபட்ச வயது: 28. அதாவது 2-8-1998-க்கு முன்போ, 1-8-2006-க்கு பின்போ பிறந்தி ருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.
தேர்வு முறை: முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல்
தேர்வு நடைபெறும் இடம் (தமிழ்நாடு): முதல் நிலைத்தேர்வு சென்னை, கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், நாகர்கோவில்/கன்னியாகுமரி, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், திருப்பூர், விழுப்புரம், கடலூர்.
மெயின் தேர்வு: சென்னை, கோவை,மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், கடலூர்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-8-2026
முதல் நிலைத்தேர்வு நடைபெறும் மாதம்: அக்டோபர்
மெயின் தேர்வு நடைபெறும் மாதம்: நவம்பர்
இணையதள முகவரி : https://www.ibps.in/index.php/clerical-cadre-xvi/