ரெயில்வேயில் உதவி லோகோ பைலட் வேலை : 9,970 பணி இடங்கள்- உடனே விண்ணப்பிங்க

இந்திய ரெயில்வேயில் காலியாக உள்ள உதவி லோகோ பைலட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரெயில்வேயில் உதவி லோகோ பைலட் வேலை : 9,970 பணி இடங்கள்- உடனே விண்ணப்பிங்க
Published on

சென்னை,

இந்திய ரெயில்வே துறைக்கு ஆட்களை தேர்வு செய்யும் ரெயில்வே தேர்வாணையம் மூலம் 9,970 உதவி லோகோ பைலட் ஆட்தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., பி.டெக். என சம்பந்தப்பட்ட துறை சார்ந்த படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 1-7-2025 அன்றைய தேதிப்படி 18 முதல் 33 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.

கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 11-5-2025 வரை ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப நடைமுறை சம்பந்தப்பட்ட விரிவான விவரங்களை https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com