முதுநிலை மற்றும் பி எட் படிப்புகளுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு ... அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

14.08.2026 அன்று மாணாவர்களுக்கான இட ஒதுக்கீடு ஆணை வெளியிடப்படும்.
Postgraduate and B.Ed. courses
Published on

சென்னை,

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2026-ம் கல்வியாண்டிற்கான பி.எட் மாணாவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இன்று (19.06.2026) முதல் 21.07.2026 வரை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். 31.07.2026 அன்று மாணாவர்கள் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும்.

இட ஒதுக்கீடு ஆணை வெளியிடப்படும்

04.08.2026 முதல் 10.08.2026-க்குள் மாணாவர்கள் தங்கள் விருப்ப கல்லூரியை தேர்வு செய்யலாம். 14.08.2026 அன்று மாணாவர்களுக்கான இட ஒதுக்கீடு ஆணை வெளியிடப்படும். மாணாவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆணையை தங்கள் உள்நுழைவு ID மூலம் www.wlase.ac.in என்ற இணையதளம் வாயிலாக பதவிறக்கம் செய்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர வேண்டும்.

24.08.2026 முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணாவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் பி.எட் 2026-2027 சேர்க்கை தொடர்பான விவரங்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன.

பி.எட் 2026-2027 சேர்க்கை தொடர்பான விவரங்கள்

1. அரசு கல்வியியல் கல்லூரிகள் : 07 (900 இடங்கள்)

அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகள்: 14 (1140 இடங்கள்)

கல்வியியல்

மொத்தம் 21 கல்வியியல் கல்லூரிகள் : 21 (2040 இடங்கள்)

2. இணைய வழி விண்ணப்பம் : 19.06.2026 வரை முதல் 21.07.2026

3. தரவரிசை பட்டியல் வெளியிடும் நாள் : 31.07.2026

4. விருப்பக் கல்லூரியை தேர்வு செய்யும் : நாட்கள்: 04.08.2026 வரை முதல் 10.08.2026 (7 நாட்கள்)

5. இட ஒதுக்கீடு ஆணை : 14.08.2026

6. கல்லூரிகளில் சேரும் நாட்கள் : 17.08.2026 5 21.08.2026 வரை

7. வகுப்புகள் தொடக்கம் : 24.08.2026

உயர்கல்வித்துறை அமைச்சர்

மாணாவர்கள் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவுகளை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை வளமாக்கி கொள்ள வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com