திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் கவனத்திற்கு.. ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு

இளைஞர்கள் எதிர்பார்த்த ராணுவ ஆட்சேர்ப்புக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் கவனத்திற்கு.. ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு
Published on

ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான இளைஞர்களின் லட்சியங்களில் ஒன்றாக உள்ளது. இத்தகைய இளைஞர்கள் ராணுவம் வெளியிடும் ஆட்சேர்ப்பு அறிவிப்பினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ராணுவத்தில் அவ்வப்போது ஆட்சேர்ப்புக்கு மாவட்ட வாரியாக அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ராணுவ ஆட்சேர்ப்புக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராணுவத்தில் சேர விருப்பம் உள்ள இளைஞர்கள், www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக 01.04.2026 வரை விண்ணப்பிக்கலாம்.

ராணுவ ஆட்சேர்ப்பு தொடர்பான கூடுதல் தகவலுக்கு கீழ்கண்ட அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளுமாறும், மேலும், இந்த ராணுவ ஆட்சேர்ப்பில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பயனடைய தங்களை தயார் படுத்திக்கொள்ளுமாறு திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்பு கொள்ள :

ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம்,

கருடா லைன்ஸ்,

கண்டோன்மென்ட், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு,: 620 001

தொலைபேசி: 0431 2464992

இணையதளம் : recruiting0443.tn@nic.in

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com