சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியாகிறது

இந்த முடிவுகளை, தமிழக மாணவர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியாகிறது
Published on

சென்னை,

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில், நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்ற 10-ம் வகுப்பு தேர்வை 25 லட்சம் மாணவர்களும், பிளஸ்-2 தேர்வை 18.5 லட்சம் மாணவர்களும் என மொத்தம் 43.5 லட்சம் பேர் எழுதினார்கள்.

கடந்த ஆண்டு சி.பி.எஸ்.இ. 10 மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3-வது வாரத்திலேயே வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம், இந்தாண்டு முதல் புதிய கல்விக் கொள்கையின்படி, 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள், தங்களின் மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ளும் வகையில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இரண்டாம் தேர்வு எழுதும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இரண்டாம் தேர்வுகள் அடுத்த மாதம் நடக்க இருப்பதால், இந்தாண்டுக்கான 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

10-ம் வகுப்பு தேர்வில், ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரள மாநிலங்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், இந்த முடிவுகளை, தமிழக மாணவர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.

தேர்வு முடிவுகளை, cbse.gov.in, result.nic.in, results.digilocker.gov.in, umang.gov.in ஆகிய இணையதளங்களின் வாயிலாக, தங்களின் பதிவு எண், பள்ளி எண், அனுமதி அட்டை அடையாள எண், பிறந்த தேதி உள்ளிட்டவற்றை உள்ளீடு செய்து தெரிந்துகொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com