

சென்னை,
சென்னை தாம்பரம் சனிட்டோரியத்தில் செயல்பட்டு வரும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (CCRS) நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, பதவியின் அடிப்படையில் அதிகபட்சம் ரூ.1,77,500 வரை மாத சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள் விவரம்: ஆராய்ச்சி அலுவலர் (சித்தா) – 2; ஆராய்ச்சி உதவியாளர் (வேதியியல்) – 2; மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர் – 9; ஆய்வக உதவியாளர் – 1- என மொத்தம் 14 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
ஆராய்ச்சி அலுவலர் (சித்தா): NCISM அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சித்த மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் மத்திய / மாநில இந்திய மருத்துவ பதிவேட்டில் பெயர் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆய்வக உதவியாளர்: 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அறிவியல் பாடப்பிரிவில் கல்வி முடித்தவர்களுக்கு முன்னுரிமை. அங்கீகரிக்கப்பட்ட ஆய்வக அனுபவம் அவசியம்.
சம்பள விவரம்:
ஆராய்ச்சி அலுவலர் – ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை
ஆராய்ச்சி உதவியாளர் – ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை
மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர் – ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை
ஆய்வக உதவியாளர் – ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை
விண்ணப்பிக்கும் முறை: https://siddhacouncil.com என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Director General,
Central Council for Research in Siddha,
Ministry of Ayush,
GST Road, Tambaram Sanatorium,
Chennai – 600047
விண்ணப்பிக்க 31.03.2026 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பைப் பார்க்கலாம்.
https://siddhacouncil.com/ccrs/wp-content/uploads/2026/02/1_Detailed-Notification-for-Advt.-No-01-of-2026.pdf