மத்திய அரசு பணி.. சென்னையிலேயே காலியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு போதும்

18 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசு பணி.. சென்னையிலேயே காலியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு போதும்
Published on

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 13 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது பற்றிய விவரங்கள் வருமாறு:

பணியிடங்கள்: எம்.டி.எஸ்., 6, ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 6, ஜூனியர் ஸ்டெனோகிராபர் 1 என மொத்தம் 13 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2 / ஐ.டி.ஐ.,

வயது வரம்பு: 18 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

சம்பளம் எவ்வளவு:

ஜூனியர் ஸ்டெனோகிராபர் - ரூ.19,900 - ரூ.63,200/-

ஜூனியர் செயலக உதவியாளர் (JSA) - ரூ.19,900 - ரூ.63,200/-

பல்நோக்குப் பணியாளர்- ரூ.18,000 - ரூ.56,900/-

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 22.02.2026

விவரங்களுக்கு: http://clri.org

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com