8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை: நவம்பர் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நடப்பு கல்வி ஆண்டுக்கான என்.எம்.எம்.எஸ். (NMMS) திறனாய்வு தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது.
8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை: நவம்பர் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
மாணவர்கள்
Published on: 

சென்னை,

மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தின் (NMMS) கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

கல்வி உதவித்தொகை

இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1,000 (ஆண்டுக்கு ரூ.12,000) கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

டிசம்பர் 12-ல் தேர்வு

நடப்பு கல்வி ஆண்டுக்கான என்.எம்.எம்.எஸ். (NMMS) திறனாய்வு தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இத்தேர்வெழுத விருப்பமுள்ள தகுதியான மாணவ-மாணவிகள், அரசு தேர்வு துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge.tn.gov.in என்ற முகவரிக்கு சென்று விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அரசு தேர்வுகள் இயக்ககம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேர்வுக் கட்டணமாக ரூ.50-ஐ சேர்த்து, தாங்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வருகிற நவம்பர் 3-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com