குரூப் 2, 2ஏ தேர்வு முறையில் மாற்றம்- டி.என்.பி.எஸ்.சி

டி.என்.பி.எஸ்.சி.குரூப்2, 2ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வியாழக்கிழமை(12.12.2024) அன்று வெளியாகியது.
குரூப் 2, 2ஏ தேர்வு முறையில் மாற்றம்- டி.என்.பி.எஸ்.சி
Published on

சென்னை.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப் 2 பணியில் 507 இடங்கள், குரூப் 2ஏ பணியில் ஆயிரத்து 820 பணியிடங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 பணியிடங்கள் உள்ளன. இதற்கான குரூப்2, 2ஏ முதல் நிலை போட்டித் தேர்வு கடந்த 14-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் எழுதினர். இந்த தேர்வுக்கான தற்காலிக விடைகுறியீடுகளை டி.என்.பி.எஸ்.சி. https://tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் சமீபத்தில் வெளியிட்டது.

இந்த தேர்வுக்கான முடிவுகள் உத்தேசமாக வருகிற டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி டி.என்.பி.எஸ்.சி.குரூப்2, 2ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வியாழக்கிழமை(12.12.2024) அன்று வெளியாகியது. தேர்வு நடந்த 57 நாட்களில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இத்தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2025 பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு கணினி (CBT Mode) வழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஓ.எம்.ஆர்( OMR)ஷீட் முறையிலேயே நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com