சென்னை: தொற்றுநோய் மருத்துவமனையில் 2 ஆண்டு உதவி செவிலியர் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்!

தகுதியும், விருப்பமும் உள்ள மாணவியர் 06.07.2026 முதல் 20.07.2026 வரை விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 24.07.2026க்குள் வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
2 ஆண்டு உதவி செவிலியர் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் 2026-27ஆம் ஆண்டிற்கான மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சிக்கான (ANM COURSE) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

முன்னுரிமை

இப்பயிற்சியில் பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவியருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பயின்ற மாணவியரும் விண்ணப்பிக்கலாம்.

உதவி செவிலியர் பயிற்சிக்கு (ANM COURSE) பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு விதிகளின்படி ஒற்றை சாளர முறையில் சமூகம் வாரியாக சுழற்சி முறையில் மாணவியர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பங்கள்

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இயக்குநர் (பொ), தொற்றுநோய் மருத்துவமனை, எண்.187, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில், 06.07.2026 முதல் 20.07.2026 வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் ரூ.50 பணமாக செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 24.07.2026 மாலை 5.00 மணிக்குள். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com