பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் வேலை: 10,277 பணியிடங்கள்..உடனே விண்ணப்பிங்க

வங்கிகளில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் வேலை: 10,277 பணியிடங்கள்..உடனே விண்ணப்பிங்க
Published on

சென்னை,

இந்தியாவில் உள்ள முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் ஐபிபிஎஸ் எனப்படும் வங்கிப்பணியாளர் தேர்வு ஆணையம் வாயிலாக நிரப்பபடுகிறது. ஆண்டு தோறும் காலிப்பணியிடங்களுக்கு தகுந்தபடி உரிய அறிவிப்பை வெளியிட்டு ஆட்சேர்ப்பு பணியை ஐபிபிஎஸ் மேற்கொள்கிறது. அந்த வகையில் தற்போது வங்கிகளில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

பணியிடங்கள் விவரம்: வாடிக்கையாளர் சேவை அசோசியேட் (கிளர்க்) 10,277 காலிப்பணியிடங்கள்

கல்வி தகுதி: அங்கீகரிக்கபட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21.08.2025 அன்று 20 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் எவ்வளவு: ரூ.24,050 - 64,480 வரை

தேர்வு முறை: முதன்மை தேர்வு, மெயின் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையங்கள் (தமிழ்நாட்டில்): சென்னை, கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் அமைக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்: பொதுப்பிரிவு, ஓபிசி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.850 தேர்வுக் கட்டணம் ஆகும். எஸ்சி/எஸ்டி,உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.175 கட்டணம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.08.2025 ஆகும்.

தேர்வு நடைபெறும் மாதம்: அக்டோபர் மாதம். தேர்வு முடிவு வெளியாகும் நாள் நவம்பர் ஆகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.ibps.in/wp-content/uploads/DetailedNotification_CRP_CSA_XV_Final_for_Website.pdf

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com