

ஏ .ஐ .சி. டி .இ (AICTE) என அழைக்கப்படும் "ஆல் இந்தியா கவுன்சில் பார் டெக்னிக்கல் எஜுகேஷன்" (ALL INDIA COUNCIL FOR TECHNICAL EDUCATION) என்னும் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழக துறைகள், உறுப்பு கல்லூரிகள் மற்றும் இணைப்பு கல்லூரிகள் ஆகியவற்றில் மேலாண்மை படிப்புகளில் (MANAGEMENT COURSES) தகுதியான பட்டதாரிகளை தேர்ந்தெடுத்து மாணவர் சேர்க்கை நடத்துவதற்காக நுழைவுத் தேர்வு நடத்தப்படும் அந்தநுழைவுத் தேர்வின் பெயர்"காமன் மேனேஜ்மென்ட் அட்மிஷன் டெஸ்ட் "(THE COMMON MANAGEMENT ADMISSION TEST).(CMAT) ஆகும். இந்தத் தேர்வை 'தேசிய தேர்வுகள் முகமை" எனப்படும் "NATIONAL TESTING AGENCY "என்னும் அமைப்பு நடத்துகிறது.இருப்பினும் புகழ் பெற்ற இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட்INDIAN INSTITUTE OF MANAGEMENT)எனப்படும் ஐ .ஐ .எம்(IIM) , MDI குர்கான், மற்றும் XLRI போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த CMAT நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை ஏற்பதில்லை.
CMAT நுழைவு தேர்வு எழுத அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை (UNDER GRADUATE DEGREE)முடித்திருக்க வேண்டும்.பட்டப் படிப்பில் இறுதி ஆண்டில் படிப்பவர்களும் இந்த CMAT நுழைவு தேர்வு எழுதலாம்.
இருப்பினும் மேலாண்மை படிப்புக்கான மாணவர் சேர்க்கையின் போது பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த நுழைவு தேர்வில் கீழ்க்கண்ட பிரிவுகளில் கேள்விகள் இடம் பெறும்.
1. அளவுசார் நுட்பங்கள் மற்றும் தரவு விளக்கம் (QUANTITATIVE TECHNIQUE AND DATA INTERPRETATION),
2. தர்க்கரீதியான பகுத்தறிவு (LOGICAL REASONING),
3. மொழிப் புரிதல் (LANGUAGE COMPREHENSION),
4. பொது விழிப்புணர்வு (GENERAL AWARENESS)
5. புத்தாக்கம் & தொழில்முனைவு (INNOVATION & ENTREPRENEURSHIP)
CMAT நுழைவுத் தேர்வில் மொத்தம் நூறு கேள்விகள் கேட்கப்படும். இந்தக் கேள்விகள் கொள்குறி வகை வினா அமைப்பில் (MULTIPLE CHOICE QUESTIONS) அமைக்கப்பட்டிருக்கும்.
சரியான விடைக்கு நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். ஆனால் தவறான விடைக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும்.
மொத்தம் 180 நிமிடங்கள் தேர்வு எழுத வழங்கப்படும். அதாவது மூன்று மணி நேரம் இந்த தேர்வு எழுதலாம்.
CMAT நுழைவுத் தேர்வில் முக்கியமாக கீழ்கண்ட பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
அவை..
A. QUANTITATIVE TECHNIQUES & DATA INTERPRETATION
B. LOGICAL REASONING
C. LANGUAGE COMPREHENSION
D. GENERAL AWARENESS
A.QUANTITATIVE TECHNIQUES & DATA INTERPRETATION பகுதியில்
· ARITHMETIC
PERCENTAGES, PROFIT & LOSS, SI/CI, RATIO & PROPORTION, AVERAGES, TIME-SPEED-DISTANCE, TIME & WORK, MIXTURES & ALLIGATIONS
· ALGEBRA
LINEAR & QUADRATIC EQUATIONS, INEQUALITIES, FUNCTIONS
· NUMBER SYSTEM
DIVISIBILITY, LCM/HCF, REMAINDERS, FACTORIALS
· GEOMETRY & MENSURATION
TRIANGLES, CIRCLES, AREAS/VOLUMES, COORDINATE GEOMETRY BASICS
· MODERN MATH
PERMUTATION & COMBINATION, PROBABILITY, SET THEORY
· DATA INTERPRETATION
TABLES, BAR/LINE/PIE CHARTS, CASELETS - ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெறும்
B. LOGICAL REASONING பகுதியில்
· VERBAL REASONING
CODING-DECODING, BLOOD RELATIONS, SYLLOGISMS, DIRECTION SENSE, SERIES (NUMBER/ALPHABET)
· ANALYTICAL REASONING
SEATING ARRANGEMENT (LINEAR/CIRCULAR), PUZZLES, DATA SUFFICIENCY
· CRITICAL REASONING
STATEMENT-ASSUMPTION, STATEMENT-CONCLUSION, CAUSE-EFFECT, COURSE OF ACTION
· VISUAL / NON -VERBAL
PATTERN COMPLETION, FIGURE SERIES. ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெறும்
C. LANGUAGE COMPREHENSION பகுதியில்
· READING COMPREHENSION
1–2 PASSAGES, INFERENCE AND VOCABULARY-IN-CONTEXT QUESTIONS
· VOCABULARY
SYNONYMS, ANTONYMS, ONE-WORD SUBSTITUTION, IDIOMS/PHRASES
· GRAMMAR
ERROR SPOTTING, SENTENCE CORRECTION, FILL IN THE BLANKS
· VERBAL ABILITY
PARA-JUMBLES, SENTENCE COMPLETION, CLOZE PASSAGES ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெறும்
D. GENERAL AWARENESS பகுதியில்
· STATIC GK
INDIAN POLITY/CONSTITUTION, GEOGRAPHY, HISTORY, STATIC BUSINESS FACTS
· CURRENT AFFAIRS
LAST 6–12 MONTHS' NATIONAL/INTERNATIONAL NEWS, AWARDS, SUMMITS
· BUSINESS & ECONOMY
COMPANIES, MERGERS/ACQUISITIONS, BUDGET, ECONOMIC INDICATORS, RBI POLICIES
· SPORTS & MISCELLANEOUS
MAJOR TOURNAMENTS, BOOKS & AUTHORS, IMPORTANT DAYS ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் இடம்
CMAT அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் முதலில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.
இமெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் பயன்படுத்தி பதிவு செய்தல் அவசியமாகும். மேலும் விண்ணப்ப படிவத்தை நிரப்பி புகைப்படம் மற்றும் கையொப்பத்தை கொடுக்கப்பட்டுள்ள அளவுகளின் படி பதிவேற்றம் செய்ய வேண்டும்.
டெபிட் கார்டு நெட் பேங்கிங் யு பி ஐ கிரெடிட் கார்டு போன்றவற்றின் மூலமும் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம்.
விண்ணப்பத்தின் நகலை கண்டிப்பாக டவுன்லோட் செய்து சேமித்து வைத்து கொள்ள வேண்டும். அதனை பிரிண்ட் செய்து பாதுகாப்பது மிகவும் நல்லது.
நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி முறையாக விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கும்.
அந்த நுழைவுச்சீட்டில் தேர்வு மையத்தின் முகவரி தேதி நேரம் மற்றும் சில வழிகாட்டுதல்களும் இடம் பெற்றிருக்கும்.
பெரும்பாலும், CMAT நுழைவு தேர்வு பற்றிய அறிவிப்பு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் வெளியிடப்படும். கணினி வழி முறையில் (COMPUTER BASED TEST) தேர்வு நடத்தப்படும்.
நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு இந்த தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வின் விடை குறிப்புகள் பிப்ரவரி மாதத்திற்குள் வெளியிடப்படும். அதாவது ,தேர்வு முடிந்து மூன்று வாரங்களுக்குள் தேர்வு முடிவுகள்இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்களை சதவீத தரவரிசைப்படி (PERCENTILE RANKING)பிரிவு வாரியாக வகைப்படுத்தி மதிப்பெண் அட்டை (SCOREBOARD) வழங்கப்படும்.
இந்திய அளவில் நடத்தப்படும் இந்த CMAT நுழைவுத் தேர்வு சுமார் 131 நகரங்களில் நடத்தப்படுகிறது.
சமீபத்தில் நடந்த தேர்வில் சுமார் 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட தேர்வர்கள் தேர்வு எழுத பதிவு செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த தேர்வு பற்றிய மேலும் பல விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
NATIONAL TESTING AGENCY
FIRST FLOOR,
NSIC-MDBP BUILDING,
OKHLA INDUSTRIAL ESTATE,
NEW DELHI,
DELHI 110020
https://nta.ac.in
https://cmat.nta.nic.in
PHONE :011- 40759000