அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் ஆலோசகர் பணி

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் ஆலோசகர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் ஆலோசகர் பணி
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு நிறுவமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் பெருமளவில் இந்திய பணியாளர்களை குறிப்பாக தமிழக பணியாளர்களை 1978-ம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு வேலைகளில் பணியமர்த்தி வருகிறது. இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை மேலும் விரிவாக்கும் பொருட்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தேவைப்படும் மனித வளத்தினை இந்நிறுவனத்திற்கு பெற்றுத் தருவதற்கு வெளிநாட்டில் பணியாளர்களை பணியமர்த்துவதற்கான நடைமுறைகள் அறிந்த ஆலோசகர்கள்/ ஆலோசனை முகவர்கள் (Consultant/Consultant Agencies) ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தி உள்ளது.

ஆலோசகர்கள்/ஆலோசனை முகவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதற்கான விரிவான விதிமுறைகள் அடங்கிய விவரங்கள் www.omcmanpower.tn.gov.in என்ற இந்நிறுவன வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, உரிய தகுதி மற்றும் அனுபவம் உள்ள ஆலோசகர்கள் /ஆலோசனை முகவர்கள் (Consultant/Consultant Agencies) இந்நிறுவன வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள படிவங்களை பூர்த்தி செய்து 31.12.2024 தேதிக்குள் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்) எண்.42. ஆலந்தூர் சாலை, திரு.வி.க. தொழிற்பேட்டை கிண்டி, சென்னை 600032 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com