கியூட் தேர்வு: 358 மையங்களில் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்

80,872 பேர் எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், 54,882 தேர்வர்கள் தேர்வை எழுதி இருக்கின்றனர்.
கியூட் தேர்வு: 358 மையங்களில் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்
Published on

நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய மற்றும் மாநில தனியார் பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு என்று அழைக்கப்படும் 'கியூட்' தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான கியூட் தேர்வு 'ஷிப்டு'கள் அடிப்படையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு 334 மையங்களில் இந்த தேர்வை 70,266 பேர் எழுதினார்கள். இந்த தேர்வில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 3,765 தேர்வர்கள் எழுத முடியாமல் போகவே அவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி பக்ரீத் பண்டிகை தினத்தன்று நடைபெற இருந்த தேர்வு, தள்ளி வைக்கப்பட்டு அந்த தேர்வு மே 31 மற்றும் ஜூன் 6, 7-ந்தேதிகளில் நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. அதன்படி, அதன் ஒரு பகுதி தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வை 358 மையங்களில் 80,872 பேர் எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், 54,882 தேர்வர்கள் தேர்வை எழுதி இருக்கின்றனர். அதாவது 67.9 சதவீதம் பேர் தேர்வை எதிர்கொண்டுள்ளனர்.

இதற்கு முன்பு நடத்தப்பட்ட தேர்வில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட நிலையில், நேற்று நடை பெற்ற தேர்வு எந்த பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக நடத்தப்பட்டிருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து வருகிற 6, 7-ந் தேதிகளிலும் தேர்வு நடைபெற உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com