

இந்தியாவில் படிப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. 'படித்து முடித்தாலும் வேலை கிடைக்கவில்லை' என வருந்துகின்ற இளைஞர்கள் ஒருபுறம். ஆனால் அதேவேளையில் 'எங்களுக்கு ஏற்ப தகுதியும் திறமையும் வாய்ந்த பணியாளர்கள் கிடைக்கவில்லை' என்று கூறும் தொழிலதிபர்களும் உண்டு.
தகுதியும், திறமையும் வாய்ந்த பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகளும், தனியார் நிறுவனங்களும், பல்வேறு போட்டித்தேர்வுகளை (Competitive Examinations) நடத்துகின்றன. மத்திய மாநில அரசுகள் நடத்தும் சில முக்கிய போட்டித்தேர்வுகளை பற்றி பார்ப்போம்.
1. யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யூ.பி.எஸ்.சி.) (Union Public Service Commission) நடத்தும் தேர்வுகள்
2. தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (டி.என்.பி.எஸ்.சி.) (Tamilnadu Public Service Commission) நடத்தும் தேர்வுகள்
3. ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) (Staff Selection Commission) நடத்தும் தேர்வுகள்
4. ரெயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டு (ஆர்.ஆர்.பி.) (Railway Recruitment Board) நடத்தும் தேர்வுகள்
5. வங்கித்தேர்வுகள் (Bank Examination)
என பல வகையான அமைப்புகள் நடத்தும் போட்டித்தேர்வுகள் உள்ளன. அவற்றுள் சில முக்கியத்தேர்வுகளை பற்றி பார்ப்போம்.
ஒரு மத்திய அரசு சிறப்பான முறையில் தங்கள் நிர்வாகத்தை அமைத்துக்கொள்ள தகுதியும் திறமையும் வாய்ந்த பணியாளர்களை தேர்ந்தெடுக்க அமைப்பை உருவாக்கியுள்ளது. அந்த அமைப்புதான் "யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்" (Union Public Service Commission).
இந்த அமைப்பு தகுதி வாய்ந்த பணியாளர்களை அடையாளம் கண்டு மத்திய அரசின் நிர்வாக விதிமுறைகளுக்கு ஏற்ப அவர்களை பணியமர்த்த உதவுகிறது. மத்திய அரசு ஊழியர்களின் பதவி நியமன முறைகள் பற்றி தீர்மானிக்கவும் இந்த அமைப்பு மத்திய அரசுக்கு பெருமளவில் உதவுகிறது. இந்த அமைப்பை யூ.பி.எஸ்.சி. என்றும் அழைப்பார்கள். ஆண்டுதோறும் இந்த அமைப்பு சில முக்கியத்தேர்வுகளை நடத்தி மத்திய அரசின் உயர்ந்த பணிகளுக்கான பணியாளர்களை தேர்ந்தெடுத்து மத்திய அரசுக்கு வழங்குகிறது.
யூ.பி.எஸ்.சி. நடத்தும் சில முக்கியத்தேர்வுகளை பற்றி பார்ப்போம்.
I. சிவில் சர்வீசஸ் தேர்வு (Civil Services Examination)
II. இன்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வு (Engineering Services Examination)
III. இந்தியன் எகனாமிக் சர்வீஸ் / இந்தியன் ஸ்டடிஸ்டிக்கல் சர்வீஸ் தேர்வு (Indian Economic Service / Indian Statistical Services Examination)
IV. இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் எக்ஸாமினேஷன் (Indian Forest Service Examination)
V. ஜியாலஜிஸ்ட் தேர்வு (Geologists Examination)
VI. நேஷனல் டிபன்ஸ் அகாடமி அன்ட் நேவல் அகாடமி தேர்வு (National Defence Academy and Naval Academy Examinations)
VII. கம்பைன்டு டிபன்ஸ் சர்வீசஸ் தேர்வு (Combined Defence Services Examination)
VIII. ஸ்பெஷல் கிளாஸ் ரெயில்வே அப்பரென்டிசஸ் எக்ஸாமினேஷன் (Special Class Railway Apprentices' Examination)
IX. கம்பைன்டு மெடிக்கல் சர்வீஸ் எக்ஸாம் (Combined Medical Service Exam) என்னும் இந்த தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.
இந்த தேர்வுகளெல்லாம் இந்திய அளவில் முக்கியப்பணிகளுக்காக நடத்தப்படுகின்ற தேர்வுகள் என்பதால், முதலில் இந்த தேர்வுகள் எப்போது நடத்தப்படுகின்றன? தேர்வு எழுதுவதற்கு என்னென்ன தகுதிகள் தேவை? எந்தெந்த பதவிகளுக்காக இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன? இந்த தேர்வுகள் பற்றிய அறிவிப்புகள் எப்போது வெளியிடப்படும்? இந்த தேர்வு எழுதுவதற்கான செலவுகள் எவ்வளவு ஆகும்? தேர்வுக்கான பாடத்திட்டங்கள் என்ன? என்பதை முறையாக தெரிந்து கொண்டு தேர்வுக்கான தயாரிப்பை மேற்கொண்டால் தேர்வில் வெற்றி பெற்று நீங்கள் விரும்பிய பணியை எளிதில் பெறலாம்.
“ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக வேண்டும்; ஐ.பி.எஸ்., அதிகாரியாக வேண்டும்” என இப்போது பல இளைஞர்கள் விரும்புகிறார்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். மற்றும் ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் ஆவது என்பது மிக எளிதான செயலாகும். ஆனால், இந்த உயர்ந்த பணிகளை எட்டிப்பிடிக்க கடுமையாக உழைக்க வேண்டியது அவசியமாகும்.
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தகுந்த பயிற்சிக்கு பின்னர் நேரடியாக மிக உயர்ந்த பணிகளான ஐ.ஏ.எஸ். (Indian Administrative Service), ஐ.பி.எஸ். (Indian Police Service), ஐ.எப்.எஸ். (Indian Foreign Service) போன்ற பணிகளில் சேர்த்து கொள்ளப்படுகிறார்கள்.
இவை தவிர, இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அஞ்சலகத்துறையிலும், பாதுகாப்புத்துறையிலும், ரெயில்வே துறையிலும், தகவல் துறையிலும், காவல் துறையிலும் உயர் பதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல் புதுச்சேரி சிவில் சர்வீஸ் மற்றும் டெல்லி, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பல்வேறு மத்திய அரசு பதவிகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இத்தனை வாய்ப்புகளை வழங்கும் இந்த சிவில் சர்வீசஸ் தேர்வை "ஐ.ஏ.எஸ். தேர்வு” என்றே அழைக்கின்றார்கள். ஏனென்றால், ஐ.ஏ.எஸ். (Indian Administrative Service) பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவராக (District Collector) பயிற்சிக்கு பின்னர் பணிபுரிய இயலும். இதனால், "கலெக்டர் படிப்பு” என்றுகூட இந்தத்தேர்வை சிலர் அழைப்பதுண்டு.
"சிவில் சர்வீசஸ் தேர்வு" கீழ்க்கண்ட உயர் பணிகளுக்காக தரமான பணியாளர்களை தேர்ந்தெடுக்க நடத்தப்படுகிறது.
1. இந்திய ஆட்சிப்பணி (Indian Administrative Service - I.A.S.)
2. இந்திய அயல்நாட்டுப்பணி (Indian Foreign Service - I.F.S.)
3. இந்திய காவல் பணி (Indian Police Service - I.P.S.)
4. இந்திய தபால், தந்தி கணக்கு மற்றும் நிதிப்பணி, தொகுதி - A (Indian P and T Accounts and Finance service, Group - A)
5. இந்திய தணிக்கை மற்றும் கணக்கு பணி, தொகுதி-A (Indian Audit and Accounts Service, Group - A)
6. இந்திய வருவாய் பணி, [சுங்கம் மற்றும் மத்திய வரிகள்] தொகுதி-A (Indian Revenue Service [Customs and Central Excise] Group -A)
7. இந்திய பாதுகாப்பு கணக்குகள் பணி, தொகுதி -A (Indian Defence Accounts Service, Group A)
8. இந்திய வருவாய் பணி, [ஐ.டி.] தொகுதி-A (Indian Revenue Service & (I.T.) Group - A)
9. இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகள் பணி, தொகுதி - A [உதவி மேலாளர், நிர்வாகம்] (Indian Ordnance Factories Service, Group & A) (Assistant Works Manager, Administration)
10. இந்திய அஞ்சல் பணி, தொகுதி - A (Indian Postal Service, Group & A)
11. இந்திய குடிமை கணக்குப்பணி, தொகுதி - A (Indian Civil Accounts Service, Group - A)
12. இந்திய ரெயில்வே போக்குவரத்துப்பணி, தொகுதி - A (Indian Railway Traffic Service, Group - A)
13. இந்திய ரெயில்வே கணக்குப்பணி, தொகுதி - A (Indian Railway Accounts Service, Group - A)
14. இந்திய ரெயில்வே பணியாளர் சேவை, தொகுதி - A (Indian Railway Personnel Service Group - A)
15. ரெயில்வே பாதுகாப்புப்படை உதவி பாதுகாப்பு அலுவலர், தொகுதி - A (Posts of Assistant Security Commissioner in Railway Protection Force Group - А)
16. இந்திய பாதுகாப்பு வளாகப்பணி, தொகுதி - A (Indian Defence Estates Service, Group - A)
17. இந்திய தகவல் பணி [இளநிலைத்தரம்] தொகுதி - A (Indian Information Service [Junior Grade] Group --A)
18. இந்திய வணிகப்பணி, தொகுதி - A, [தரம் III] (Indian Trade Service Group - A - (Gr. III)
19. இந்திய நிறுவன சட்டப்பணி, தொகுதி-A (Indian Corporate Law Service, Group -- A)
20. ஆயுதப்படை தலைமை குடிமைப்பணி, தொகுதி - B [அலுவலர் பிரிவு] (Armed Forces Headquarters Civil Service, Group -B) (Section Officer's Grade)
21. டெல்லி, அந்தமான மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, டாமன், டையூ, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி குடிமைப்பணி, தொகுதி -B (Delhi, Andaman and Nicobar Island, Lakshadweep, Daman, Diu, Dadra and Nagar Haveli Civil Service, Group--B)
22. டெல்லி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, டாமன், டையூ, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி காவல் பணி, தொகுதி - B (Delhi, Andaman and Nicobar Island, Lakshadweep, Daman, Diu, Dadra and Nagar Haveli Police Service, Group --B)
23.பாண்டிச்சேரி குடிமைப் பணி, தொகுதி --B (Pondicherry Civil Service, (Group --B)
24.பாண்டிச்சேரி காவல் பணி - தொகுதி -B (Pondicherry Police Service, (Group B)
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பணிகளிலும் நேரடியாக சேர விரும்புபவர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வை எழுத வேண்டும்.
ஆண்டுதோறும் சுமார் 20 முதல் 24 உயர் பதவிகளுக்காக இந்த தேர்வு நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த உயர் பணிகளுக்கான எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும் தன்மை கொண்டதாக அமையும்.
சிவில் சர்வீசஸ் தேர்வை எழுத விரும்புபவர்களுக்கான கல்வித்தகுதிகள், வயதுவரம்பு, தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறித்த விளக்கங்களைப்பற்றி அடுத்து சிந்திப்போம்.