பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர படிப்பு 3 ஆண்டுகளாக குறைப்பு

வரும் ஜூலை 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பொறியியல் கல்லூரி
Published on

சென்னை,

தமிழக பொறியியல் கல்லூரிகளில் 3 ஆண்டு கால பகுதி நேர பி.இ. படிப்புகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக உயர்கல்வி துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ், ஆறு அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகள், இரண்டு அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லுாரிகள், பகுதி நேர இன்ஜினியரிங் பட்டப்படிப்புகளை வழங்கி வருகின்றன.

3 ஆண்டுகளாக குறைப்பு

அதன் கால அளவு நான்கு ஆண்டுகள் ஆகும். இந்நிலையில், பகுதிநேர இன்ஜினியரிங் படிப்புக்கான கால அளவு, நடப்பு கல்வியாண்டு முதல், 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதில் சேர விரும்பும் மாணவ -மாணவியர், www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

வரும் ஜூலை 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்ற, டிப்ளமா படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். துறை சார்ந்த பணியில், 1 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணிபுரியும் மாணவர்களுக்கு, வயது தடை கிடையாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com