மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி: என்னென்ன படிப்புகள்? நுழைவுத்தேர்வு எப்படி? - முழு விவரம்

மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் 2005 -ம் ஆண்டு நிறுவப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி: என்னென்ன படிப்புகள்? நுழைவுத்தேர்வு எப்படி? - முழு விவரம்
Published on

மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி

ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் 2005 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முட்டுக்காடு என்னும் இடத்தில் இந்த நிறுவனம் (NATINAL INSTITUTE FOR EMPOWERMENT OF PERSONS WITH MULTIPLE DISABILITIES )இயங்குகிறது.

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறையின் (MINISTRY OF SOCIAL JUSTICE AND EMPOWERMENT, GOVERNMENT OF INDIA ) கீழ் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

பார்வை குறைபாடு, தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், செவிப்புலன் குறைபாடு, இயங்குதிறன் குறைபாடு, வளர்ச்சி குறைபாடு, அறிவுசார் குறைபாடு, மன நோய், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு, மூளை முடக்கு வாதம், நாள்பட்ட நரம்பு சார்ந்த குறைபாடுகள், குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகள், பல்வகை நரம்பு அழற்சி நோய், பேச்சு மற்றும் மொழி குறைபாடு, தலசீமியா ( THALASEEMIA), ஹிமோபிலியா (HEEMOPILIA), அமில வீச்சு தாக்குதல் ஏற்படும் நோய் மற்றும் பார்க்கின்சன் நோய் (PAARKKINSEN)- போன்ற நோய்களாலும் குறைபாடுகளாலும் பாதிக்கப்பட்டவர்கள் பலன் பெறும் வகையில் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்விற்காக உருவாக்கப்பட்ட அமைப்பாக இந்த நிறுவனம் திகழ்கிறது.

பல்வேறு துறைகள்;

மாணவ மாணவிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக பல துறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

DEPARTMENT OF MEDICAL SCIENCE

DEPARTMENT OF CLINICAL PSYCHOLOGY

DEPARTMENT OF SPECIAL EDUCATION

DEPARTMENT OF SPEECH, HEARING & COMMUNICATION

DEPARTMENT OF ADULT INDEPENDENT LIVING

DEPARTMENT OF THERAPEUTICS

நடத்தப்படும் படிப்புகள்

இந்த நிறுவனத்தில் நடத்தப்படும் பல்வேறு படிப்புகள் பற்றிய விபரம் வருமாறு;

CERTIFICATE COURSE IN CARE GIVING

DIPLOMA IN EDUCATION SPECIAL EDUCATION (MULTIPLE DISABILITIES)

BPT---FOUR YEARS + SIX MONTHS INTERNSHIP

BOT-BACHELOR OF OCCUPATIONAL THERAPY

B.P.O--BACHELOR IN PROSTHETICS AND ORTHOTICS

B.A.S.L.P-BACHELOR IN AUDIOLOGY AND SPEECH LANGUAGE PATHOLOGY

B.ED.SPL.EDN(M.D)-BACHELOR OF EDUCATION SPECIAL EDUCATION (MULTIPLE DISABILITIES)

M.EDSE(MD)--M.ED SPECIAL EDUCATION (MULTIPLE DISABILITIES)

P.G.D.E.I--POST GRADUATE DIPLOMA IN EARLY INTERVENTION

மேலும் விவரங்களுக்கு..

இந்த நிறுவனம் பற்றிய மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

NATINAL INSTITUTE FOR EMPOWERMENT OF PERSONS WITH MULTIPLE DISABILITIES (NIEPMD)

EAST COAST ROAD, MUTTUKADU, KOVALAM POST CHENNAI 603112,

TAMIL NADU, INDIA.

TEL: 044- 27472113, 27472423

MOBILE:9444314716 .

நுழைவுத் தேர்வு

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறையின் (MINISTRY OF SOCIAL JUSTICE AND EMPOWERMENT, GOVERNMENT OF INDIA ) என்ற அமைப்பின் கீழ் மொத்தம் ஐந்து கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த அமைப்பு, சென்னை (CHENNAI )கல்கத்தா (KOLKATTA) , கட்டாக் (CUTTACK), புதுடெல்லி (NEW S,DELHAI),அசாம் (ASSAM) ஆகிய இடங்களில் இயங்குகிறது.

இந்த படிப்புகளில் சேர காமன் என்ட்ரன்ஸ் டெஸ்ட் (COMMON ENTRANCE TEST) (CET)என்னும் நுழைவு தேர்வை கண்டிப்பாக எழுத வேண்டும்.

இந்த தேர்வை" சுவாமி விவேகானந் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ரிகாபிலிடேசன் ட்ரெயினிங் அண்ட் ரிசர்ச்" ( SWAMY VIVEKANAND NATIONAL INSTITUTE OF REHABILITATION TRAINING AND RESEARCH) என்னும் அமைப்பு நடத்துகிறது. மத்திய அரசின் அமைப்பான இந்த நிறுவனம் கீழ்க்கண்ட முகவரியில் இயங்குகிறது.

நுழைவுத் தேர்வு விவரங்களுக்கு..

இந்த நுழைவுத் தேர்வு பற்றிய மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

SWAMI VIVEKANAND NATIONAL INSTITUTE OF REHABILITATION TRAINING & RESEARCH (SVNIRTAR),

DEPARTMENT OF EMPOWERMENT OF PERSONS WITH DISABILITIES (DIVYANGJAN), (MINISTRY OF SOCIAL JUSTICE & EMPOWERMENT, GOVERNMENT OF INDIA)

OLATPUR, PO:BAIROI, DIST: CUTTACK (ODISHA) -754010

PHONE NO.:-0671-2805347, FAX: 0671-2805862 MOBILE: 09438568953, 09937755426

E-mail: dasvnirtar@gmail.com

Website: https://svnirtar.nic.in, https://admission.svnirtar.nic.in. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com