கள்ளக்குறிச்சி ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 5-ந் தேதி நேர்முகத்தேர்வு

விற்பனை பிரதிநிதிக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டப்படிப்புடன் எம்.பி.ஏ. முடித்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 5-ந் தேதி நேர்முகத்தேர்வு
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பால், பால் உபபொருட்கள் மற்றும் ஐஸ்கிரீம் வகைகளை விற்பனை செய்யவும், புதிய முகவர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களை நியமனம் செய்யவும் விற்பனை பிரதிநிதி ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விற்பனை பிரதிநிதிக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டப்படிப்புடன் எம்.பி.ஏ. முடித்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம், போக்குவரத்து கட்டணமாக ரூ.1,000 வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். நேர்முகத்தேர்வு வருகிற 5-ந் தேதி காலை 11 மணி முதல் மதியம் 4 மணி வரை சின்னசேலத்தில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில் நடைபெறுகிறது.

நேர்முகத்தேர்வின் போது படிப்பு சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். கணினி அடிப்படை தெரிந்து இருக்க வேண்டும். கண்டிப்பாக இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும். சொந்த ஊரில் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும், கூடுதல் விவரங்களை 90430 49160, 97879 73450 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com