பொறியியல் 3-ம் சுற்று கலந்தாய்வு: 12,346 மாணவர்கள் வெளியேறினர்!

மூன்றாம் சுற்றில் தற்காலிக ஒதுக்கீடு பெற்ற 68,640 மாணவர்களில் 56,294 பேர் மட்டுமே அந்த ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளனர்.
பொறியியல் 3-ம் சுற்று கலந்தாய்வு
Published on

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 418 பொறியியல் கல்லூரிகளில், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 13-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க 1,02,719 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.

68,640 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு

இதையடுத்து, கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை கடந்த 21-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் பொதுப்பிரிவில் 66,159 பேருக்கும், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 2,481 பேருக்கும் என மொத்தம் 68,640 மாணவர்களுக்கு பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

56,294 பேருக்கு இறுதி ஒதுக்கீடு

தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்த மாணவர்களுக்கான இறுதி ஒதுக்கீட்டு ஆணை நேற்று வெளியிடப்பட்டது. பொதுப்பிரிவில் 54,684 பேருக்கும், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 1,610 பேருக்கும் என மொத்தம் 56,294 மாணவர்களுக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

6,621 பேர் மேல்நோக்கு நகர்வுக்கு காத்திருப்பு

இறுதி ஒதுக்கீடு பெற்றவர்களில் 6,621 மாணவர்கள் தங்களுக்கு கிடைத்த கல்லூரி ஒதுக்கீட்டை உறுதி செய்துவிட்டு, மேல்நோக்கு நகர்வுக்காக காத்திருக்கின்றனர்.

12,346 பேர் கலந்தாய்வில் இருந்து வெளியேற்றம்

மூன்றாம் சுற்றில் தற்காலிக ஒதுக்கீடு பெற்ற 68,640 மாணவர்களில் 56,294 பேர் மட்டுமே அந்த ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளனர். இதனால், தற்காலிக ஒதுக்கீட்டை இறுதி செய்யாத 12,346 மாணவர்கள் கலந்தாய்வில் இருந்து வெளியேறியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com