பொறியியல் கலந்தாய்வு: 2 சுற்றுகளில் 86,802 இடங்கள் நிரம்பின!

எஞ்சியுள்ள ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 275 இடங்களுக்கான கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியுள்ளது.
பொறியியல் கலந்தாய்வு: 2 சுற்றுகளில் 86,802 இடங்கள் நிரம்பின!
Published on

சென்னை,

என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த மாதம் (ஜூலை) 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில் தற்போது பொதுப் பிரிவினருக்கும், அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு பிரிவினருக்கும் கலந்தாய்வு நடக்கிறது. முதல் சுற்று கலந்தாய்வு கடந்த 3-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. அதில் பொதுப்பிரிவு மற்றும் 7.5 சதவீத ஒதுக்கீடு என மொத்தம் 26 ஆயிரத்து 851 இடங்கள் நிரம்பின.

2-வது சுற்று கலந்தாய்வு நிறைவு

2-வது சுற்று கலந்தாய்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் இரு பிரிவிலும் சேர்த்து மொத்தம் 59 ஆயிரத்து 951 இடங்கள் நிரம்பின. அதாவது முதல் மற்றும் 2-வது சுற்று கலந்தாய்வு நிறைவில் மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 77 இடங்களில் 86 ஆயிரத்து 802 இடங்கள் நிரம்பியுள்ளன. எஞ்சியுள்ள ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 275 இடங்களுக்கான கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 761 பேர் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com